துருக்கி பூகம்பம்: 17,000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை, இன்னும் அதிகரிக்கும் என தகவல்!

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2023 (18:01 IST)
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி விட்டது என்றும் 20 ஆயிரத்தை தாண்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
துருக்கி சிரியா ஆகிய இரு நாடுகளில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கம் காரணமாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகியnஅ. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவரின் எண்ணிக்கை 17 தாண்டியதாக அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் 
 
துருக்கியில் 14 ஆயிரம் பேரும் சிரியாவில் 3000 பேரும் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பிணங்கள் குவியல் குவியலாக மீட்க பட்டு வருவதாகவும் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்