முதல் அட்டையைத் தேர்வு செய்யவும்.


டெரட் என்பது ஒரு மர்மமான உலகம், அது எதிர்காலத்தைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பிரபல வழிமுறையாகும். இந்த வார்த்தையின் தோற்றம் கூட மர்மமாகவே உள்ளது. இது வெறும் வார்த்தைகள் அல்ல எதிர்காலமும் வாழ்க்கையும் சார்ந்தது. ஒரு சிலர் இந்த வார்த்தை மைனர் அர்கானா கார்டுகளுடன் தொடர்புடைய டெரொச்சி என்னும் வார்த்தையிலிருந்து உருவானது என்று கருதுகின்றனர். ஆனால் சிலர் இது கார்டுகளுக்கு பின்னால் காணப்படும் குறுக்குவழியான ட்ரொட்டோரிலிருந்து உருவானதாக கருதுகின்றனர். இது எதிர்காலத்தை பற்றிய ஒரு மர்மமான கதையாகும்.

டெரட் டெக் குவிப்பானது, மேஜர் அர்கானா மற்றும் மைனர் ஆர்கானா என பிரிக்கப்பட்ட 78 கார்ட்டுகளை உடையதாகும். ஆர்கானா என்னும் வார்த்தை, ஆர்கானேஸ் என்ற இலத்தீன் மொழியில் சொல்லில் இருந்து உருவானது. இதன் பொருள் 'மர்மமான தனிப்பட்ட வளர்ச்சி' என்பதாகும். மேஜர் ஆர்க்கானா என்பது மாய மந்திரங்களைப் பற்றி அறவியலைப் படிக்கும் மாணவர்களுக்கான முக்கிய பாடமாகும். இது சின்னங்கள் வழியாக எழுதப்பட்ட போதனைகளைக் கொண்டதாகும்.

இது பல்வேறு மத குழுக்கள் மற்றும் பழங்குடியினரின் மர்மமான கற்பித்தல் முறை ஆகும். டெரட்டின் தத்துவம் பண்டைய யூத பாரம்பரியமான பைபிளின் மாய விளக்கமாக கொண்ட கபாலாவில் இருந்து தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. வார்த்தைகள் மற்றும் எண்களில் தெய்வீக சக்தியால் நிரப்பப்பட்டுள்ளது இது பிரபலமான குறி சொல்லும் முறையாக உள்ளது. இந்த மர்மத்தையும் இதனை பற்றிய அசாதாரணமான அறிவையும் புரிந்துகொள்ள நாம் முயற்சி செய்வோம்.

உங்களது எதிர்காலத்தை தெரிந்து கொள்வது எப்படி.

  • முதலில் உங்களுடைய கேள்வியை ஒரு முறைக்குப் பலமுறை ஆழமாக யோசியுங்கள். அதனை தெளிவாக ஒரு காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.
  • அதன்பிறகு "அட்டையை தேர்ந்தெடுக்கவும்" என்பதை கிளிக் செய்து, கட்டில் இருந்து 3 அட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாக தேர்வு செய்யவும்.
  • முதல் அட்டை கேள்வியை நி்னைத்த பொழுது இருந்த உங்களது மனநிலையை காட்டும்.
  • இரண்டாவது அட்டை உங்கள் ஆசைகளை நிறைவேற்ற மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை குறிப்பிடும்.
  • மூன்றாவது அட்டை உங்கள் கேள்விக்கு பதில் கூறும்.