தெலுங்கானா மாநிலத்தில், கணவர் இறந்தபின் இருவருடன் உறவு வைத்திருந்த ஒரு பெண்ணின் குழந்தையை, அவர்களில் ஒரு காதலன் பழிவாங்கும் நோக்கில் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மமதா என்ற பெண், தனது கணவர் இறந்த பிறகு, தனது இரண்டரை வயது மகள் கீர்த்திகாவுடன் நடைபாதையில் வசித்து வந்தார். இந்த நிலையில், மமதாவிற்கும் பில்லி ராஜு என்பவருக்கும் இடையே உறவு ஏற்பட்டது. அவர்களுக்குள் திருமணமாகி, இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர்.
இருப்பினும், மமதா மற்றொரு ஆணுடன் தொடர்பிலிருந்ததால், பில்லி ராஜுவிற்கும் மமதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்தனர். இந்த சூழலில்தான், ஒருநாள் இரவு மமதா தனது மகளுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது, பில்லி ராஜு குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். குழந்தையை கொலை செய்யும் நோக்கத்துடன் வனப்பகுதிக்கு கொண்டு சென்றதாகவும் தெரிகிறது.
குழந்தை காணாமல் போனதை கண்டறிந்த மமதா, உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, சிசிடிவி காட்சிகளின் மூலம் பில்லி ராஜு இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து குழந்தையை மீட்டனர்.
பில்லி ராஜுவிடம் விசாரணை நடத்தியபோது, மமதா மற்றொருவருடன் தொடர்பிலிருந்ததால், அவரை மனரீதியாக காயப்படுத்த குழந்தையை கொலை செய்யும் நோக்கத்துடனும் கடத்தியதாக தெரிவித்தார். இதனையடுத்து, பில்லி ராஜு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.