’பாபநாசம்’ பட பாணியில் கணவரை கொலை செய்து புதைத்த மனைவி.. காட்டி கொடுத்த டைல்ஸ்..!

Mahendran

புதன், 23 ஜூலை 2025 (15:11 IST)
கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம்' திரைப்படத்தின் பாணியில், கணவனை கொலை செய்து புதைத்த மனைவி மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் சாவான் மற்றும் அவரது மனைவி கோமல் ஆகியோர் வசித்து வந்த நிலையில், திடீரென விஜய் சவானை காணவில்லை என தெரிகிறது. ஆனால் தனது கணவர் வெளியூருக்கு சென்றிருப்பதாக கோமல் கூறியபோதும், குடும்பத்தினருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது.
 
இந்நிலையில், விஜய்யின் சகோதரர் ஒருநாள் கோமல் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டை திறந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் தரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மூன்று டைல்ஸ் புதிதாக மாற்றப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
 
காவல்துறையினர் விரைந்து வந்து அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது, விஜய்யின் உடல் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விசாரணையில், கோமலும் பக்கத்து வீட்டில் வசித்த ஒரு இளைஞரும் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரும் சேர்ந்து விஜய்யைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
சமீபத்தில் தான் விஜய்க்கு ரூ.6 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வந்ததாகவும்,   இந்த பணத்திற்காக கோமல் தனது காதலனுடன் சேர்ந்து விஜய்யைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்