தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (14:34 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த அடுத்த நாள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கவிழும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த 18 எம்.எல்.ஏக்களை, சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதனை எதிர்த்து அவர்கள் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என சிலரும், இப்போதைக்கு தீர்ப்பு வெளியாகாது என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சென்னை பெரம்பூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் “எந்த காலத்திலும் திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அதை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். தற்போதுள்ள அதிமுக அரசு மாநில சுயாட்சியை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்த அடுத்த நாள் அதிமுக ஆட்சி கவிழும். அதன்பின் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்