ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சமீபத்தில் 100% கேஷ்பேக் ஆஃபரை வழங்கியது. தற்போது இதனை காப்பி அடித்து ஐடியா மேஜிக் கேஷ்பேக் சேவையை வழங்கியுள்ளது. ஆனால், இதில் வாடிக்கையாளர்களுக்கான லாபம் அதிகமா உள்ளது.
ரூ.398 அல்லது அதற்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.50 மதிப்புடைய எட்டு வவுச்சர்கள், ரூ.2700 மதிப்புடைய ஐந்து ஷாப்பிங் வவுச்சர்கள், மைஐடியா அல்லது ஐடியா வலைத்தளத்தில் ரீசார்ஜ் செய்வோருக்கு ரூ.200 மதிப்புடைய கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ஐடியாவின் மேஜிக் கேஷ்பேக் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.