மீண்டும் கார்த்தியுடன் இணையும் ரகுல் ப்ரீத்சிங்

வெள்ளி, 19 ஜனவரி 2018 (13:49 IST)
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் கார்த்தி ஜோடியாக நடிக்க இருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். வினோத் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் ரகுல் ப்ரீத்சிங். இந்தப் படம்தான் தமிழில் ரகுலுக்கு முதன்முதலில் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்துள்ளது. எனவே, செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரகுல்.
 
இந்நிலையில், மறுபடியும் கார்த்தி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்துவரும் கார்த்தி, அடுத்ததாக ரஜத் இயக்கத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில்தான் மறுபடியும் கார்த்தியுடன் ஜோடி போடுகிறார் ரகுல். லட்சுமன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்