தினகரனை எதிர்கொள்ள தயாரான தங்க தமிழ் செல்வன்

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (14:30 IST)
டிடிவி தினகரன் அதிருப்தி அடைந்தால் எதிர்கொள்ள வேண்டியதுதான் என்று அவரது தீவிர ஆதரவாளரான தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இதைத்தொடர்ந்து தற்போது அவர் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன், உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு தினகரன் தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்தால் அதில் நான் சேர மாட்டேன் என்று கூறியிருந்தார்.
 
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
 
எனக்கும் தினகரனும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எங்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக சிலர் தவறான தகவலை பரப்புகிறார்கள். தினகரன் தனிக்கட்சி தொடங்கும் எண்ணத்தில் இருந்தால் அதில் நான் சேர மாட்டேன் என்று சொன்னது உண்மைதான்.
 
இதனால் தினகரன் அதிருப்தி அடைந்தால் அதை சந்திக்க வேண்டியதுதான் என்று கூறியுள்ளார். இவரது இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்