துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

Mahendran

வியாழன், 10 ஏப்ரல் 2025 (17:51 IST)
திமுக எம்பி கல்யாணசுந்தரம் என்பவர், தனது உதவியாளர் மூலம் செய்தியாளர்களுக்கு துண்டு சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்து, அந்த கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என்று கூறியது, செய்தியாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திமுக மாநிலங்களவை எம்பி கல்யாணசுந்தரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அவரது உதவியாளர் துண்டு சீட்டை கொடுத்து, "இதில் உள்ள கேள்விகளை மட்டுமே கேளுங்கள்" என்று தெரிவித்தார்.
 
அந்த துண்டு சீட்டில் உள்ள நான்கு கேள்விகள்:
 
உச்ச நீதிமன்ற தீர்ப்பை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
 
ஆளுநரின் அடாவடி போக்கை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 
மும்மொழி கொள்கையை திமுக எதற்கு ஏற்றுக்கொள்ளவில்லை?
 
உச்ச நீதிமன்றமே பத்து மசோதாக்கு அனுமதி அளித்தது குறித்து உங்கள் கருத்து என்ன?
 
இந்த நான்கு கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என்று திமுக எம்பியின் உதவியாளர் கூறிய நிலையில், ஆளுங்கட்சியை சார்ந்த ரிப்போர்ட்டர்கள் மட்டும் அந்த கேள்விகளை கேட்டனர்.
 
மற்ற ரிப்போர்ட்டர்கள் வெவ்வேறு கேள்விகள் கேட்க முயற்சி செய்தபோது, அதற்கு பதிலளிக்காமல், "பத்திரிகைகள் நடுநிலையாக உண்மை செய்திகளை வெளியிட வேண்டும்" என்று கூறிவிட்டு பேட்டியை முடித்துக் கொண்டார்.
 
கேள்விகளை எழுதி கொடுத்து கேட்கச் சொல்வது அவமதிக்கும் செயல் என பத்திரிகையாளர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்