பீகாரின் பல மாவட்டங்களை கடந்து சென்ற திடீர் புயல் மற்றும் கனமழை காரணமாக, மரங்கள் விழுந்து கட்டிடங்கள் இடிந்த காரணமாக பலர் காயமடைந்தனர். இதில் மிகவும் சோகமூட்டும் சம்பவமாக நாளந்தா மாவட்டத்தின் நக்வான் கிராமத்தில் ஒரு பழமையான ஆலமரம் கோயில் மீது விழுந்து, பல உயிர்களை பறித்ததுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் சிக்கிக்கொண்டது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நிகழ்ந்த இந்த புயலின் போது, பருவமழையை விட கடுமையான கன மழையுடன் கூடிய புயல் கிராமத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக நின்று வந்த ஆலமரம், பக்தர்கள் குவிந்திருந்த கோயில் மீது விழுந்ததில், கோயில் கட்டிடம் இடிந்து விழுந்து பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர்.
தற்போது மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. உள்ளூர்வாசிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்படுவதோடு, அரசு மற்றும் காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.