இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

Mahendran

வியாழன், 10 ஏப்ரல் 2025 (17:57 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகை தர இருக்கின்ற நிலையில்,  அவரது வருகைக்கு முன்பே சில முக்கிய சந்திப்புகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்று கூறப்படும் நிலையில், தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள அண்ணாமலை தீவிர முயற்சி செய்து வருவதாக புறப்படுகிறது.
 
இந்த நிலையில் சற்று முன் குருமூர்த்தியை அண்ணாமலை சந்தித்ததாகவும், தன்னை மாற்றக் கூடாது என்றும், அதற்கான நடவடிக்கைகளை நீங்கள் தான் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் புறப்படுகிறது.
 
நாளை அமித்ஷா சந்திக்கும் முக்கிய நபர்களில் ஒருவர் குருமூர்த்தி என்பதால், அமித்ஷா  சந்திப்பின்போது அண்ணாமலையை மாற்ற வேண்டாம் என்ற கோரிக்கையை குருமூர்த்தி வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
 
மேலும், நாளை அமித்ஷா சென்னைக்கு வரும்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
மொத்தத்தில், அமித்ஷா வருகை பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்