பாலிவுட் படங்களில் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட் படங்களிலும், தொலைக்காட்சி சீரியலான குவாண்டிகோவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனால், அவர் அமெரிக்காவிலேயெ செட்டில் ஆகி இருக்கிறார்.
குவாண்டிகோ இரண்டு சீசன்கள் முடிந்து, தற்போது மூன்றாவது சீசனுக்கான ஷூட்டிங்கில் சோப்ரா பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், அந்த சீரியலில் நடிக்கும் நடிகர் ஆலன் பவலும், பிரியங்கா சோப்ராவும் லிப் டு லீப் முத்தம் கொடுக்கும் காட்சியை நியூயார்க் நகரில் படக்குழு படமாக்கியது.