விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (14:54 IST)
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
விருதுநகர் அருகே தாயில் பட்டி என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த நிலையில் இன்று இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. 
 
முதல் கட்ட விசாரணையில் மத்தாப்பு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட்டாசு ஆலைகள் வெடி விபத்து ஏற்பட்டவுடன் ஊழியர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர்.
 
இருப்பினும் இருவர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக தெரிகிறது. தீயணைக்கும் பணியில்  தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாகவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து விட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்