அங்கு தன் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பின்னர், மீண்டும் ஹாங்காங்கிற்கு அவர் சென்றிருந்தார். அப்போது, அவர் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடல் பாடினார். அதில் முதல் பரிசை பெற்ற பின், அவர் இசையை நோக்கி தன் கவனம் குவித்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு அவர் முயற்சித்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் கோமா நிலைக்குச் சென்ற நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு பால் இசைக் கலைஞர்களும், ரசிகர்களும் இரங்கல் கூறி வருகின்றனர் .