பறக்கும் பாலத்தில் கோர விபத்து... 2 இளைஞர் உயிரிழப்பு

சனி, 8 ஜூலை 2023 (15:04 IST)
மதுரை மாவட்டம் பறக்கும் பாலத்தில் அதிவேகத்தில் வந்து பக்கவாட்டு சுவற்றில் மோதியதில்  2  இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வடக்குமாசி வீதி பகுதியைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மற்றும் மதுரை பெத்தானியாபுரம் மூலப்பிள்ளை தெரு பகுதியைச்  சேர்ந்த சீனிவாசன்(24). இவர்கள் இருவரும் மதுரை கள்ளந்திரி பகுதியில் உள்ள அவர்களது நண்பரின் கிணற்றில் குளித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மதுரை பறக்கும் பாலத்தின் மேல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக போய்க் கொண்டிருக்கும்போது  அவுட்போஸ்ட் அருகே மேம்பாலத்தில் திரும்பும்போது வளையில் வக்கவாட்டு மீது மோதியலில் விபத்து ஏற்பட்டது.

இதில், பைக்கை ஓட்டிச் சென்ற ஆனந்த கிருஷ்ணன் சுவரில் மோதி உயிரிழந்தார். சீனிவாசன் பறந்து சென்று,  தலைசிதறி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்