பிரதீப் ரங்கநாதன்- எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்?

Webdunia
சனி, 11 நவம்பர் 2023 (19:00 IST)
லவ்டுடே  பிரதீப் ரங்கநாதன் மற்றும்  எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி, நானும் ரவுடிதான். தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்த்ல் நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா ஆகியோர் நடித்திருந்தார்.

இப்படத்தை அடுத்து லைகா தயாரிப்பில், அஜித் நடிப்பில் ஒரு படத்தை விக்னேஷ் இயக்கவிருனந்த நிலையில், இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், லவ்டுடே  பிரதீப் ரங்கநாதன்  மற்றும் , எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ள படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசையில், லியோ படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்