தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பிரதீப் ரங்க நாதன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெற்றி பெற்ற நிலையில், 2022 ஆம் ஆண்டு லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார்.
''நான் பேசுவது, என் செயல்பாடுகள் எனது நடவடிக்கை எல்லாம் நடிகர் தனுஷ் போல இருப்பதாக கூறுகிறார்கள், ஆனால், அது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. நான் தனுஷ் போல இருப்பதாக ஒப்பிட்டு பேசுவது தவறு என்று நினைக்கத் தோன்றுகிறது…. அவர் எங்கேயோ இருகிறார்… நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன்'' என்று கூறியுள்ளார்.