தக் லைஃப் படுதோல்வி… தியேட்டர் அதிபர்கள் நஷ்ட ஈடு கோரிக்கையா?... கமலுக்கு அடுத்த சிக்கல்!

vinoth

செவ்வாய், 17 ஜூன் 2025 (09:38 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு நிலவியது.  ஆனால் படம் ரிலீஸான பின்னர் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வசூல் பெரிய அளவில் சரிந்துள்ளது. இதுவரை இந்திய அளவில் இந்த படம் 50 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்ட சொல்லி தற்போது திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ரிலீஸ் செய்ய கொடுத்த முன்பணம் கூட வசூலாகவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் கமல்ஹாசனுக்கு அடுத்த சிக்கல் உருவாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்