ஜிகர்தண்டா-2 பார்த்து பெரும்பாலான காட்சிகளில் கரைந்தேன்- பார்த்திபன்

சனி, 11 நவம்பர் 2023 (14:06 IST)
ஜிகர்தண்டா 2 படத்தைப் பார்த்த நடிகர் பார்த்திபன் இப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

பீஸா, பேட்ட உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜிகர்தண்டா 2 .  இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா  உள்ளிட்ட  நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை பீரியட் திரைப்படமாக உருவாக்கியுள்ள  நிலையில்  இந்த படம் தீபாவளியையொட்டி   நேற்று  ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் பற்றி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளதாவது:

''Good afternoon friends
Jigarthanda -3’ பார்த்தேன் -FDFS என என்றாவது ஒரு நாள் நான் பதிவிடுவேன். காரணம்… ஜிகர்தண்டா -2 !
நான் விமர்சகன் அல்ல.
நிறை குறை சொல்ல!
தெரியாமல் போய்,போன இடத்தில் பிடித்து விட்டால்
அதன் பெயர் பேய்!
இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே படத்திற்கே போகிறேன்.நினைத்தபடியே மனதை உலுக்கி விட்டது.
நண்பர் Mr larence
நண்பர் mr s j surya
நண்பர் திரு சந்தோஷ் நாராயணன்
நண்பர் திரு திரு
நண்பர் திரு கதிரேசன்
இன்னும் நாயகி உட்பட பலரும்
யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள்.
மிரட்டும் யானைகளோ நம் கண்களில் நீர் சுரக்க நடிக்கிறார்கள்.
பெரும்பாலான காட்சிகளில் கரைந்தேன்
Jigarthanda -1  நான் நடித்திருக்க வேண்டிய படம்.
முதல் பட அறிமுகத்திற்கு முன்பே நண்பர் திரு கார்த்திக் சுப்புராஜை எனக்கு அறிமுகம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி
தியேட்டரில்  வெடித்த கைதட்டல்களை தீபாவளி பட்டாசாக ரசித்தேன்.

பி கு
Live  or Q&A நாளைய நேரம் விரைவில் சொல்கிறேன்’’ என்று தெரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்