தேவரா இரண்டாம் பாகம் வரவே வராதா?... இயக்குனர் பிறந்தநாளில் ஜூனியர் NTR கொடுத்த அப்டேட்!

vinoth

செவ்வாய், 17 ஜூன் 2025 (10:00 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில்  ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரின்  நடிப்பில் ‘தேவரா முதல் பாகம்’கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பின் என் டி ஆர் நடித்த படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸானது.

ஆனால் படம் வெளியான முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தது.  படத்தின் பல காட்சிகள் இணையத்தில் ட்ரோல் ஆகின. ஆனாலும் படம் திரையரங்குகள் மூலமாக மொத்தம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் இது லாபம் தரும் வசூல் இல்லை என்று சொல்லப்பட்டது. இதனால் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பில்லை என்று கருத்துகள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று இயக்குனரின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூனியர் என் டி ஆர் அவருக்குத் தெரிவித்த வாழ்த்தில் “பிறந்தநாள் வாழ்த்துகள் சிவா. வலிமையாலும், மௌனத்தாலும் பேசும் ஒரு இயக்குனர். மீண்டும் ஒருமுறை அலையில் பயணம் செய்யக் காத்திருக்கிறேன்” என்று வாழ்த்தியுள்ளார். இதன் மூலம் தேவரா இரண்டாம் பாகம் உருவாவது உறுதி என்று ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்