தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா 25 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு சில ஆண்டுகளில் விவாகரத்துப் பெற்றார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை. இதற்கிடையில் அவரது தந்தையின் மரணமும் அவரை வெகுவாகப் பாதித்தது.
இந்நிலையில் யே மாயா சேசவே திரைப்படம் ஜூலை 18 ஆம் தேதி ரி ரிலீஸாகவுள்ளது. இதையடுத்துப் படத்தை மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு செல்ல படக்குழு ப்ரமோஷன் செய்யவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் மீண்டும் ஒன்றாக தோன்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.