இவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய டங்கல் படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் செய்ய முயற்சித்த போது எழுந்த சிக்கல் பற்றி பேசியுள்ளார். அதில் “பாகிஸ்தான் சென்சார் அதிகாரிகள் படத்தில் தேசிய கொடி இடம்பெறும் காட்சியையும், இறுதியில் தேசிய கீதம் ஒலிக்கும் காட்சியையும் நீக்கவேண்டும் எனக் கூறினர். ஆனால் நான் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் என் படம் பாகிஸ்தானில் ரிலீஸாகவில்லை என்றாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.