1000 கோடி ரூபாய் கலெக்ட் பண்ணும்னு சொல்லி மாட்டிக்க விரும்பல… ப்ரஸ் மீட்டில் உஷாராக பேசிய சுந்தர் சி!

vinoth
புதன், 15 ஜனவரி 2025 (07:52 IST)
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பொங்கல் போன்ற ஒரு பண்டிகைக்கு ஏற்ற கலகலப்பான படமாக மத கஜ ராஜா உள்ளதாக விமர்சனங்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா நடித்திருக்கும் கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொங்கலுக்கு வெளியான பல படங்களில் அதிகம் வசூல் செய்யும் படமாக மத கஜ ராஜா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் ஒரு தியெட்டரில் ரசிகர்களோடு படம் பார்த்த இயக்குனர் சுந்தர் சி அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் “மத கஜ ராஜா படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. 1000 கோடி வசூல் பண்ணுமா” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சுந்தர் சி “அப்படியெல்லாம் வாய்விட்டு மாட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை. படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக நான் கண்ணீரோடுதான் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்