இறந்த பின்னும் சிரிக்கவைக்கும் மனோபாலா… மத கஜ ராஜா பார்த்து பாராட்டித் தள்ளும் ரசிகர்கள்!

vinoth

செவ்வாய், 14 ஜனவரி 2025 (08:57 IST)
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா நேற்று ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ரிலீஸான இந்த படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பொங்கல் போன்ற ஒரு பண்டிகைக்கு ஏற்ற கலகலப்பான படமாக மத கஜ ராஜா உள்ளதாக விமர்சனங்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா நடித்திருக்கும் கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மனோபாலா இறப்பிற்குப் பிறகு அவரின் கடைசி படமாக இந்த படம் வெளிவந்துள்ளது. இதில் இறந்து போன ஒரு நபராக மனோபாலா நடித்து அரங்குகளை சிரிப்பில் மூழ்கடிக்கிறார். அவர் இடம்பெறும் 15 நிமிடக் காட்சிகள் நான் ஸ்டாப் சிரிப்பலைகளை உருவாக்குவதாக படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். இந்த படம் ரிலீஸானால் நான் வேறு லெவலுக்கு போய்விடுவேன் என மனோபாலா இயக்குனர் சுந்தர் சி யிடம் சொல்லிக் கொண்டே இருந்தாராம். இப்போது அவர் நம்மோடு இல்லாதது மிகப்பெரிய இழப்பே.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்