நீ என் படத்தில் நடி.. நான் உன் படத்துல நடிக்கிறேன்.. கார்த்தி - நானி இடையே நட்பு ஒப்பந்தம்?

Siva

புதன், 25 ஜூன் 2025 (16:57 IST)
பிரபல தெலுங்கு நடிகர் நானி தயாரிக்க இருக்கும் 'ஹிட்' படத்தின் நான்காவது பாகத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் தமிழ்குமரன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்த படத்திற்காக பிரம்மாண்டமான செட் ஒன்று ராமேஸ்வரம் கடலோர பகுதியில் போடப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த செட்டில் படப்பிடிப்பு நடத்துவதற்கு முன்பே, காரைக்காலில் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும், அங்கு ஒரு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், இந்த  படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நானி இணைந்து நடிக்க இருப்பதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 'ஹிட்' படத்தின் நான்காவது பாகத்தை நானி தயாரிக்க இருக்கும் நிலையில், அதில் கார்த்தி நடிப்பதும், கார்த்தி நடிக்கும்  படத்தில் நானி நடிப்பதும் இருவருக்கும் இடையேயான நட்பை வலுப்படுத்துவதாக தெரிகிறது. 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்