சந்தானம் கோபித்துக் கொள்வார்… இருந்தாலும் சொல்கிறேன் – சுந்தர் சி வேண்டுகோள்!

vinoth

திங்கள், 13 ஜனவரி 2025 (09:30 IST)
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து சந்தானம் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார்.

இந்நிலையில் அவர் காமெடியனாக நடித்த ‘மதகஜ ராஜா’ திரைப்படம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பேசிய இயக்குனர் சுந்தர் சி “சந்தானம் இப்போது பெரிய ஹீரோவாகிவிட்டார். ஆனால் அவரை காமெடியனாக எவ்வளவு மிஸ் பண்ணுகிறோம் என்பது மத கஜ ராஜா படத்தைப் பார்த்தால் தெரியும். அவருக்கு ஒரு வேண்டுகோள். அவர் மீண்டும் காமெடி பாத்திரத்தில் நடிக்கவேண்டும். இதைக் கேட்டால் அவர் கோபித்துக் கொள்வார்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்