இந்த வருடம் பொங்கலுக்கு எத்தனையோ படங்கள் ரிலீஸாகி வரும் நிலையில் 12 ஆண்டுகளாக கிடப்பில் கடந்த மதகஜராஜா பெரும் வரவேற்பை பெற்று வருவதுதான் ஆச்சர்யம்.
கடந்த ஆண்டு முதலாகவே தமிழ் சினிமாவில் ஹிட் படங்களுக்கான வாய்ப்பு குறைவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பொங்கலுக்கு ஏராளமான தமிழ் படங்கள் வரிசைக்கட்டி வெளியாகி வருகின்றன. இந்த ரேஸில் 12 ஆண்டுகள் கழித்து மதகஜராஜாவும் இணைந்துள்ளது.
விஷால், சந்தானம் மற்றும் இருவர் என நான்கு பேர் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். பின்னர் எல்லாரும் பிரிந்து குடும்பமாக வேறு ஊர்களில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், அவர்களது ஸ்கூல் மாஸ்டர் வீட்டு கல்யாணத்திற்காக ஒன்று சேர்கிறார்கள். அப்போதுதான் தனது நண்பர்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையில் ஒரு பிரச்சினை இருப்பது விஷாலுக்கு தெரிகிறது.
நண்பர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க விஷால் முடிவு செய்கிறார். இதில் கற்குவேல் (சோனுசூட்) தான் தனது நண்பர்கள் வாழ்க்கை சீரழிய காரணம் என விஷாலுக்கு தெரிய வருகிறது. பெரும் அரசியல், பண செல்வாக்குடன் உள்ள கற்குவேலை, மதகஜராஜாவான விஷால் எப்படி எதிர்கொண்டு வெல்கிறார் என்பதே கதையின் சுருக்கம்.
ஆனால் படம் முழுவதும் வழக்கமான சுந்தர்.சி பாணி காமெடிகள், நடிகைகளின் கவர்ச்சியால் ஃபில் செய்திருக்கிறார்கள். படத்தை பார்க்கும் பலரும் பழைய சந்தானத்தின் காமெடி சென்ஸை மிஸ் செய்யாமல் இருக்க முடியாது. பல இடங்களில் டபுள் மீனிங்கில் சந்தானம் பேசும் வசனங்களுக்கும் விசில் பறக்கிறது.
க்ளைமேக்ஸுக்கு முன்னதாக வரும் மனோபாலாவின் காமெடி ட்ராக் படத்தின் ஒட்டுமொத்த முக்கியமான இடம் என்று சொல்லலாம். அந்த காட்சிக்கு தியேட்டரே விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால் பழைய ஸ்டைல் மேக்கிங் மற்றும் எடிட்டிங் உத்திகள் புது படம் பார்ப்பதான உணர்வை தர மறுக்கிறது.
விஜய் ஆண்டனியின் பின்னணி இசை, பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெரிதும் லாஜிக்குகளை எதிர்பார்க்காமல் குடும்பமாக சென்று சிரித்து வர விரும்பும் குடும்ப ஆடியன்ஸ்க்கும், இளசுகளுக்கும் நல்ல சாய்ஸாக மதகஜராஜா உள்ளது.
Edit by Prasanth.K