10 தொகுதிகளில் தமிழக பாஜக வேட்பாளர்கள் இவர்களா? வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு?

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (12:17 IST)
தமிழகத்தில் பாஜக 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த 10 தொகுதிகளில் பிரபல வேட்பாளர்களை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் இதனை அடுத்து வெளியாக உள்ள இரண்டாம் கட்ட பட்டியலில் தமிழக பாஜக வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக கோவை தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் வானதி சீனிவாசனுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதைப்போல் தென் சென்னை தொகுதியில் திருப்பதி நாராயணன் அல்லது கரு நாகராஜன் ஆகிய இருவரில் ஒருவர் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது

மேலும் புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அவர் கூறப்படுகிறது. அதைப்போல் குஷ்பு மற்றும் வினோத் செல்வம் ஆகிய இருவருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உண்டு என்றும் திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய இரண்டு தொகுதிகளில் இவர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

அதைப்போல் மாநில துணை தலைவர் பால் கனகராஜ் வடசென்னை போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் நெல்லையில் நயினார் நாகேந்திரன், சிவகங்கையின் நாச்சியப்பன் தென்காசியில் ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய நண்பரான ஆனந்த் ஐயாசாமி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து சசிகலா புஷ்பா போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்