மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

Siva

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (16:42 IST)
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்திற்காக, விலைப்புள்ளி சமர்ப்பித்த இரண்டு நிறுவனங்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
டெல் நிறுவனம் ஒரு மடிக்கணினிக்கு ரூ.40,828 என்ற விலையில் டெல் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை சமர்ப்பித்துள்ளது. அதேபோல், ஏசர் நிறுவனம் ஒரு மடிக்கணினிக்கு ரூ.23,385 என்ற குறைந்த விலையில் ஒப்பந்தம் சமர்ப்பித்துள்ளது.
 
இந்த இரண்டு நிறுவனங்களில் இருந்து 20 லட்சம் மடிக்கணினிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 
இந்த மாத இறுதிக்குள் மடிக்கணினி கொள்முதல் ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பிறகு மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்தத் திட்டம் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் என்றும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அவர்களுக்கு உதவும் என்றும் கருதப்படுகிறது. அரசின் இந்தத் திட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்