பாகிஸ்தானுக்கு சுதந்திர தின வாழ்த்து சொல்வதெல்லாம் குற்றமாக கருத முடியாது! – உச்ச நீதிமன்றம் கருத்து!

Prasanth Karthick

வெள்ளி, 8 மார்ச் 2024 (08:44 IST)
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து விமர்சித்தவர் மீது தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தற்போது இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை நடவடிக்கைகளை மேற்கொண்ட பாஜக மத்திய அரசு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஆர்ட்டிக்கிள் 370ஐ நீக்கியது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மத்திய அரசின் இந்த முடிவை விமர்சித்து பலரும் பேசி வரும் நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாளை கறுப்பு தினமாகவும் சிலர் அனுசரித்து வருகின்றனர். அவ்வாறாக பேராசிரியர் ஒருவர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாளை கறுப்பு தினமாக அனுசரித்து வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைத்ததற்காக அவர் மீது ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் “ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை விமர்சிப்பது, பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிப்பது போன்றவற்றை குற்றமாக கருத முடியாது. ஒவ்வொரு விமர்சனத்தையும் குற்றமாக கருதினால் ஜனநாயகம் நிலைக்காது” என்று தெரிவித்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்