வரும் நாடாளுமன்ற தேர்தலில் திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பல பிரபலமானவர்கள் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரான முகமது ஷமி, பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது
முகமது ஷமியை நாடாளுமன்ற தேர்தலில் களம் இறக்க மேற்குவங்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அவரிடம் ஆலோசனை செய்யப்படுவதாகவும் முகமது ஷமியும் இதற்கு ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது
முகமது ஷமியின் சொந்த மாநிலம் உத்தரப்பிரதேசம் என்று இருந்தாலும் அவர் ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மேற்கு வங்காளத்தில் பெங்கால் அணிக்கு தொடர்ந்து விளையாடி வருகிறார்/ எனவே மேற்கு வங்காளத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதை அடுத்து அவர் மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது
இதற்கு பாஜக மேலிடம் ஒப்புக்கொண்டதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தான் அரசியல் கட்சியில் இணைந்து அரசியல் செய்வார்கள் என்ற நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணிகள் இருக்கும் ஒரு பிரபலமே அரசியல் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva