ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

Mahendran

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (17:28 IST)
ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் உற்பத்தி ஆலையின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதால் தீப்பற்றி எரிவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல், ரஷ்யாவின் ஒரென்பர்க் பகுதியில் உள்ள அந்த ஆலை மீது நேற்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
 
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில், பொதுமக்கள் ஏராளமான ட்ரோன்கள் பறந்ததை பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யாவின் விமானப் படை, உக்ரைனின் 36 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ராக்கெட், விண்வெளித் துறை மற்றும் போர் ஆயுதங்கள் தயாரிப்பில் ஹீலியம் வாயு அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே, இந்த ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல், ரஷ்யாவின் ராணுவ உற்பத்திக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல், ரஷ்யா-உக்ரைன் போரை இன்னும் நீட்டிக்கும் என அஞ்சப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்