மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 48 தொகுதிகளில் இருக்கும் நிலையில் அதில் 32 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் மீதமுள்ள 16 தொகுதிகளில் ஷிண்டே சிவசேனாவுக்கு 8 தொகுதிகள் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகள் மற்ற சில கட்சிகளுக்கு நான்கு தொகுதிகள் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத பாஜக 8 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஷிண்டே கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், மோடி அமித்ஷாவை நம்பி வந்ததுக்கு கழுத்தை அறுக்காதீர்கள். எங்களுக்கு துரோகம் செய்தால் எதிர்காலத்தில் பாஜகவை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.