ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா திடீர் நீக்கம்..? பாஜகவின் ப்ளான் என்ன?

Prasanth Karthick
திங்கள், 16 டிசம்பர் 2024 (09:35 IST)

மத்திய பாஜக நீண்ட காலமாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கொண்டு வர காய் நகர்த்தி வரும் நிலையில், இன்று மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது அலுவலக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

 

 

மத்தியில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. பல திட்டங்களை செயல்படுத்தியுள்ள பாஜக அரசு, தொடர்ந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

அதை தொடர்ந்து இன்று நடைபெற உள்ள மக்களவை கூட்டத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்றைய அலுவலக பட்டியலில் இந்த மசோதா இடம்பெறவில்லை. எதிர்க்கட்சிகளின் அமளி பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால் அதை அலுவலக குறிப்பில் இடம்பெறாமல் செய்திருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. 

 

டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுவதால் கூட்டத்தொடர் முடியும் இறுதி நாளில் இந்த மசோதாவை கொண்டு வர திட்டமிட்டிருக்கலாம் அல்லது இன்றே சபாநாயகரின் துணைப் பட்டியலில் அதை சேர்த்து உடனடியாக உள்ளே கொண்டு வரத் திட்டமிட்டிருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்