கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் தேனிலவை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது, ஐயப்ப பக்தர்கள் சென்ற பஸ் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் சேர்ந்த நிகில் என்ற 27 வயது இளைஞர் கனடாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அனு என்பவருக்கும் கடந்த 30ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில், திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் மலேசியாவுக்கு தேனிலவு சென்றனர். அங்கு தேனிலவு முடித்துவிட்டு, கேரளா திரும்பிய நிலையில் விமான நிலையத்திலிருந்து தங்கள் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக, தமிழகத்தில் இருந்து சென்ற ஐயப்ப பக்தர்கள் பேருந்து காரில் மோதியதை அடுத்து, கார் சுக்கு நூறாக உடைந்தது. இந்த சம்பவத்தில் நிகில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அனு படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிகிறது.