அதன்பின் ஒரே நாடு ஒரே தேர்தல் வரையறுக்கப்பட்ட நிலையில் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 12ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் நாளை ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய இருக்கிறார். தாக்கல் செய்த பின்னர் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசில் வகையை அனுப்பப்படும் என்று தெரிகிறது.
மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் உறுதியாக இருக்கும் நிலையில் காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருவதால் அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.