அந்தமான், நிக்கோபார் தீவுகளின் உளவு பலூன்கள்: இந்தியப் படைகள் அறிவிப்பு

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (16:29 IST)
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உளவு பலூன்கள் பறந்ததாக இந்திய படைகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் சீனாவின் உளவு பலூன் பறந்ததை அடுத்து அமெரிக்க ராணுவம் அதை சுட்டு தள்ளியது. அதனை அடுத்து கனடா உள்ளிட்ட ஒரு சில நாடுகளிலும் உளவு பலூன்கள் பறந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க வான் பகுதியில் பறந்த பலூனை போலவே அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மேற்பகுதியில் இந்திய படைகள் உளவு பலூனை பார்ப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. 
 
பலூன் போன்ற வெள்ளை நிறத்தில் கொண்ட அவை தெளிவாக தெரியாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பொருளின் படங்கள் பொதுமக்களால் தரையில் இருந்து எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
அந்த பலூன் மியான்மரில் இருந்து வந்ததா? அல்லது சீனாவில் இருந்து வந்ததா என  தெரியவில்லை என்றும் மூன்று அல்லது  நான்கு நாட்களுக்கு பிறகு அங்கிருந்து மறைந்து விட்டதாகவும் இந்திய படைகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்