தாழ்வு மனப்பான்மையை விரட்டு!-சினோஜ் கட்டுரைகள்

வியாழன், 23 பிப்ரவரி 2023 (22:54 IST)
உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் வாழ்க்கையில் பலருக்கு என்றாவது, எப்போதாவது இன்று தாழ்வுமனப்பான்மை என்பது தலையெட்டிப் பார்த்திருக்கும்.

அதற்காகப் பிறக்கும்போதே, சில்வர் ஸ்பூனிலேயே யாராலும் பிறக்க முடியாது. புத்தர் கூட அந்த பாக்கியத்தைவிட்டு, தன் கண்களில் 3 முக்கிய காட்சிகளைப் பார்த்துவிட்டு,  வசதி போகங்களுடன் வாழ்ந்து வந்த தன் இளவரசு பதவியை உதறித் தள்ளிவிட்டு, ஞானத்தைத் தேட ஊரெல்லாம் திரிந்து,  இரவல் பெற்று  உண்ணும் நிலைக்குச் சென்றார். இன்று பெளத்த  மார்க்கம் ஸ்தாபித்தவராகப் போற்றப்படுகிறார்.

உலகமெங்கிலும் அவரது கொள்கைகளைப் பின்பற்றும் மக்கள் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள்.

அவர் தன்  நிலையில் இருந்து கீழே இறங்கி வந்து, கையேந்தி இரவல் பெற்று உண்ணுவது குறித்துக் கவலைப்படவில்லை. அவரது நோக்கம் அவரது அவரது உபதேசத்தின் வழி, அஹிம்சையைப் போதித்து, அதன்படி வாழ்வதிலேயே இருந்ததால், அவருக்குப் பின் புறம்பேசுபவர்களின் ஏசல்கள் எதுவும் அவர் காதில் விழவில்லை.


ஆனால், ஐந்தாம் நூற்றாண்டில்,பெளத்தம் தோற்றுவித்த புத்தரின் போதனைகளும், தத்துவமும்,  3 ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆளுகை செய்தது, தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்திப் பாடலிபுத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு, ஆப்கானிஸ்தான் முதல், வங்கத்தேசம் வரை தன் ஆட்சியில் எல்லைப் பரப்பை வைத்து ஆட்சிசெய்த, தேவனாம்பிரியன் என்ற அசோகருக்கு, அவரது, ஆட்சியின் 8 வது ஆண்டின்போது நடைபெற்ற கலிங்கப் போரின் வெற்றிக்குப் பின், புத்தரின் கொள்கையில் பற்றாகி,  3 ஆம் பவுத்த சங்கத்திற்குப் புரவலராகவும் விளங்கியுள்ளார்.

அந்தளவுக்கு பெளத்தரின் அஹிம்சை அவரது காலத்திலும், காலத்திற்குப் பின்பும் ஏன் இப்போதுவரை உலகெங்கிலும் பல கோடி மக்களை அன்பிப் வழி, அவரது உயர்வான கொள்கைகளின் வழி ஆட்சி செய்கிறது, வழி நடத்துகிறது.

அதனால், யார் எந்த  நிலையில் இருக்கிறார்கள், என்ன தோற்றத்தில் இருக்கிறார்கள், வசதியா, வசதி இல்லைய? என்பது முக்கியமல்ல;  அவரின் கொள்கையும், செயல்களும் நோக்கமும்தான் முக்கியம்!

இருபதாம் நூற்றாண்டில் கறுப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மார்டின் லூதர் கிங், நிறத்தின் அடிப்படையில் அல்ல, அவர்களின் செயல்களின் அடிப்படையில், குணத்தின் அடிப்படையிலும் மதிக்கப்பட வேண்டுமென்று கூறினார்.

அதுவரை, கறுப்பின மக்கள் எல்லோரும் அடிமைகளாக விற்கப்பட்டு, தாழ்வுமனப்பான்மையில் ஊறியவர்களுக்கு அவர் வந்து தன்னம்பிக்கை  ஊட்டி, அவர்களின் வாழ்வில் பொன்னொளி ஏற்றினார்.

அவர் இறந்து 40 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்க நாட்டின் முதல் கறுப்பின அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றார்.

உலகமே திரும்பிப் பார்த்தது.

உலகையே ஆட்டிப்படைக்கும் வல்லாதிக்கமுள்ள வல்லரசு நாடான அமெரிக்காவின் உச்ச பதவியில் ஒபாமா அமர்ந்தபோது, கறுப்பின மக்கள் எல்லா உலகின் உச்ச பதவிகளில் அமர தகுதியானர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கினர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராகப் பொறுப்பேற்றார்.

ALSO READ: நமது குறிக்கோள் என்பது என்ன? சினோஜ் கட்டுரைகள்
 
அதனால்,  நம் தகுதியை வளர்த்துக் கொள்கின்ற போது, தேவையற்ற விமர்சனங்களும், விஷமான தூஷனங்களும் ஈரத்தில் நமத்துப் போன பட்டாசுகள் போலவே தானாகவே நமத்துப் போகின்றன.

கடந்த 1880 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டஸ்கும்பியா நகரில் பிறந்த  அவர், அடுத்த 18 வது மாதத்திலேயே மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, இதனால், கேட்கின்ற, பார்க்கின்ற, முக்கியமாகப் பேசுகின்ற திறனையும் இழந்தார்.

அக்குழந்தையைப் பெற்றோர்களுக்கு உலகமே இருண்டது போல் தோன்றியது.

ஆனாலும், உள்ளமுடையவில்லை. உருக்குலையவில்லை. ஒரு கடைசிய நம்பிக்கையாக, பொருட்களைத் தடவிப் பார்த்து, அது என்னது என்று அறிந்து கொண்டு வந்த அக்குழந்தைக்கு டெலிபோன் கண்டுபிடித்த கிரஹாம்பெல்லின் மூலம் ஒரு பெர்கின்சன் என்ற நிறுவனம்  உதவ முன்  வந்தது.

அக்குழந்தையின் வாழ்க்கை  நலமுடன் அமைய கல்விசாலையில் படிக்க  வழிகிடைத்தது.

ஆம் . அவர்கள் சல்லிவன் என்ற ஆசிரியை அக்குழந்தைக்குக் கற்பிக்க அனுப்பிவைத்தனர்.

அக்குழந்தை மற்ற குழந்தைகளைப் போல் அவரது வருகைக்குப் பின்னர் கற்கத் தொடங்கியது.  அதன்பின்ன பல மொழிகள் கற்று பட்டப்படிப்பும் முடித்து, தி ஸ்டோரி ஆப் லைஒஃப் என்ற தன் வரலாறு எழுதினார்.

அவர்தான் ஹெலன் கெல்லர். தனக்கு இருந்த தடைக்கல்லையே படிக்கல்லாக மாற்றி வெட்டி பெற்றார் அவர்.

இந்த தொழில் நுட்ப யுகத்தில் எதிவும் எதிர்மறைக் கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. எளிதில் குறைகூறி ஒருவரின் திறமைகளை கேலி செய்து அதை முளையிலேயே கிள்ளையெறியவும் செய்கிறார்கள்.

இதற்காக ஒருவரின் கேலியும் ஏசலும் ஒருவரின் மனதை மாற்றுகின்ற அளவுக்கு அத்திறமையானரின் மனம் லேசப்பட்டதல்ல, நினைத்தனை அடைந்து வெற்றிபெறுமளவு உள்ளம் உறுதிகொண்டவர் என்பதை தன் செயலில் வழி நிரூபிக்கும்போது, தான் வெற்றி பெறும் வரை எந்த நிலையில் இருந்தாலு, எந்தச் சூழ் நிலையில் இருந்தாலும், காதில் கேட்பதை எல்லாம் உள்ளத்தை உறுதியாக்கிக்கொள்ளும் ஊக்க மருந்தாக நினைத்துக்கொண்டு, செயலில் திருப்தி கொண்டிருந்தால், காலப் போக்கில் இந்த நிலை மாறும்….

தாழ்வு மனப்பான்மை என்பது தன் மீது மதிப்பி இழக்கும் நிலை! தன் மீதான நம்பிக்கையை இழக்காத அவரை அது அவர்களின் மனதை ஒருபோதும் பாதிக்கச் செய்யாது.

இருக்கின்ற இக்கட்டான சூழலைச் சமாளித்துக்கொண்டு வெளியே வருவதில், தான் தன் திறமை அடங்கியுள்ளது, இதற்காக  அடுத்தவர்களுடன் நம்மை ஒப்பீடு செய்துகொண்டு, இல்லாத ஒன்றிற்காக ஏங்கிக் கொண்டிருப்பதை விட, நம்மிடம் இருக்கின்ற திறமையைக் காட்டிலும், இன்னும் பல மடங்கு திறமைகளையும்,   நேற்று வரை தெரிந்த தகவல்களைவிட, விஷயங்களைக் காட்டிலும் இன்று, இனிமேலும், அறிந்துகொள்ள முற்படும்போது இந்த தாழ்வு மனப்பான்மை என்பது கொசு போல பறந்தோடிவிடும்.

இதற்கான நமக்கு ஒருவர் வந்து தோளைத் தட்டிக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்காமல், அவரவர்க்கு அவரவர் வேலை பெரிது என்ற பெருந்தன்மையுடன்   நம் வாழ்க்கையில் இலக்கை நோக்கி, நாம் ஓடும் போது,  தாழ்வு மனப்பான்மை தோன்றக் காரணமான விஷயத்தை  நம்மிடம் இருந்து நீக்க முயற்சிக்கலாம்.

இந்த உலகில் யாரும் நம்மை விட உயர்ந்தவரும் அல்ல, தாழ்ந்தவரும் அல்ல எல்லோரும் சரிசமம் தான் என்பதை நினைத்துக் கொண்டாலே போதும்! 

தொடரும்

#சினோஜ்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்