துப்பாக்கிசூடு சம்பவத்தை லைவ்-ஆக படம்பிடிக்கச் சென்ற நிருபர் கொலை!

வியாழன், 23 பிப்ரவரி 2023 (15:14 IST)
அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூட்டை நேரலையாகப் படம்பிடிக்கச் சென்ற தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள புளோரிடா மாகாணத்தின் ஆரஞ்சு கவுன்டி என்ற பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளன.

இச்சம்பவத்தில், ஒரு வீட்டில் தாய் மற்றும் 9 வயது மகன் என்ற இருவர் காயமடைந்துள்ளனனர்.

இதை, ஒரு டிவி நிருபர் நேரலையாக படம்பிடிக்கச் சென்றிருக்கிறார். அவருடன் இணைந்து, ஒரு புகைப்படக் கலைஞரும் சென்றிருக்கிறார்.

அப்போது, ஒரு மர்ம நபர் இவர்கள் நின்றிருந்த வாகனம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

ALSO READ: அமெரிக்கா: மிக்சிசன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு-3 பேர் பலி
 
இத்தாக்குதலில், 4 பேர் காயமடைந்த நிலையில், தொலைக்காட்சி   நிருபர் உயிரிழந்தார்.

உயிரிந்த நிருபர், ஸ்பெக்டர் நியூஸ் 13  என்ற சேனலைச் சேர்ந்தவர் என்பது, அவரைக் கொன்றதாக மோசஸ் என்ற 19 வயது நபரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்