உலகம் முழுவதும் பணிநீக்க நடவடிக்கை: அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை பிடித்த இந்தியா..!

வியாழன், 23 பிப்ரவரி 2023 (17:28 IST)
உலகம் முழுவதிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்திய நிறுவனங்கள் அதிக பணி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக புள்ளி விவரம் வெளியிட்டு விடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கூகுள் மைக்ரோசாப்ட் உள்பட பல நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் உலகிலேயே அதிக அளவில் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் என புள்ளி விவரப்பட்டியலில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா இந்தியா நெதர்லாந்து பிரேசில் மற்றும் ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகள் முதல் ஐந்து இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் மற்றும் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் 35 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நெதர்லாந்து நாட்டில் 17,000 பேர்களும் பிரேசில் நாட்டில் ஒன்பதாயிரம் ஊழியர்களும் ஜெர்மனியில் 8000 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் சீனா, சிங்கப்பூர் இந்தோனேசியா பிரிட்டன் கனடா ஆகிய நாடுகளும் இந்த பணிநீக்க பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பணி நீக்கத்தில் ஈடுபட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்