எனது ஒருநாள் போட்டி அறிமுகம் இப்படி இருக்கும் என கனவிலும் நினைக்கவில்லை… திலக் வர்மா நம்பிக்கை!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (08:10 IST)
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் பெற்ற திலக் வர்மா, சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகமாகி சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார்.

அதன் பின்னர் அயர்லாந்து தொடரிலும் இடம்பெற்ற அவர் அடுத்து நடக்க உள்ள ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணியின் 17 வீரர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார். இதனால் உலகக் கோப்பைக்கான அணியிலும் இடம்பெற அவருக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஆசியக் கோப்பையில் அறிமுகமாவது குறித்து பேசியுள்ள திலக் வர்மா “என்னுடைய ஒருநாள் போட்டி அறிமுகம், ஆசியக் கோப்பையில் நடக்கும் என நான் கனவினில் கூட நினைத்ததில்லை.  அடுத்தடுத்த மாதங்களில் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.” என நம்பிக்கையோடு பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்