ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு! கேப்டன் யார் தெரியுமா?

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (13:40 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டிக்கு கலந்து கொள்ளும் இந்திய அணியின் விளையாட்டு வீரர்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 
 
ரோகித் சர்மா கேப்டன் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய அணியில் விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், சூரியகுமார் யாதவ் , திலக் வர்மா இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்கூர்,  பும்ரா, முகமது ஷமி, சிராஜ், குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்  
 
முதல் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது. செப்டம்பர் இரண்டாம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்