ஆடும் லெவனை தேர்வு செய்வதுதான் மிகப்பெரிய தலைவலி… இந்திய அணி குறித்து பும்ரா!

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:43 IST)
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று இரண்டாவது டி 20 போட்டி டப்ளின் நகரில் நடக்க முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய அயர்லாந்து அணியை இந்திய பவுலர்கள் 152 ரன்களில் சுருட்டி 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் பும்ரா “நான் நன்றாக உணர்கிறேன். இன்று கொஞ்சம் வறட்சியாக இருந்தது. அது மெதுவாக இருக்கும் என்று நினைத்தோம், எனவே முதலில் பேட்டிங் செய்தோம். ஆடும் லெவனைத் தேர்ந்தெடுப்பது கடினம். பெரும் தலைவலி. அனைவரும் ஆர்வமாக உள்ளனர். எல்லோரும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

நாங்கள் அனைவரும் இந்தியாவுக்காக விளையாட விரும்பினோம். இறுதியில், ஒவ்வொருவரும் அவரவர் வழியில் உழைக்க வேண்டும். நீங்கள் எதிர்பார்ப்புடன் விளையாடினால் அழுத்தத்தை உணர்வீர்கள். அந்த எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைக்க வேண்டும். பல எதிர்பார்ப்புகளுடன் விளையாடும் நீங்கள் உங்களுக்கு 100 சதவீதம் நியாயம் செய்யவில்லை என அர்த்தம்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்