இன்று மூன்றாவது டி 20 போட்டி… அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (07:50 IST)
பும்ரா தலைமையில் இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல்  இரண்டு டி 20 போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது போட்டி டப்ளின் நகரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று வொயிட்வாஷ் செய்யும்.

முதல் இரண்டு போட்டிகளிலும் வாய்ப்புக் கிடைக்காத இளம் வீரர்களுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்