போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

vinoth

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (07:14 IST)
ஐபிஎல் தொடரின் 18 ஆவது சீசன் தொடங்கி மிகச்சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் கே கே ஆர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 200 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் அணி 120 ரன்கள் மட்டுமே சேர்த்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த சீசனில் முதல் போட்டியை மட்டும் வென்ற SRH அடுத்த முன்று போட்டிகளைத் தொடர்ச்சியாக தோற்றுள்ளது.

இது பற்றி பேசியுள்ள அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் “போனவாரம்தான் நாங்கள் 250 ரன்கள் அடித்தோம். ஆனால் அடுத்தடுத்து மூன்று போட்டிகளை தோற்றுள்ளோம்.எங்களால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. பேட்டிங்கை விட பீல்டிங்தான் எங்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. நாங்கள் இரண்டு கேட்ச்களை விட்டோம்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்