நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிராஜின் அதிரடி ஆட்டம் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்தர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணி மோதிக் கொண்டன. இதில் குஜராத் அணிகாக பந்துவீசிய சிராஜ் அதிரடியாக ஆர்சிபியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக பல ஆண்டுகளாக அவர் ஆர்சிபி அணியில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசியுள்ள விரேந்தர் ஷேவாக் “சாம்பியன்ஸ் ட்ராபிக்கு இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது சிராஜை மனதளவில் காயப்படுத்தியுள்ளது. அதனால் ஏற்பட்ட நெருப்பை நேற்றைய ஆட்டத்தில் பார்த்தேன். ஒரு இளம் பவுலரிடம் நாங்கள் இதைத்தன எதிர்பார்க்கிறோம்.
என்னை தேர்வு செய்யாத உங்களுக்கு என் திறமையை காட்டுகிறேன் என்ற வகையில் அவர் செயல்பட்டார். இதே வேகத்தில் அவர் செயல்பட்டு மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K