உலகக் கோப்பையை யார் வெல்வது ? கங்குலி தகவல்

திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (20:48 IST)
19 வது உலகக் கோப்பையை  யார் வெல்வது ? என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடக்க உள்ள உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் அக்டோபர் 15 ஆம் தேதி நடக்க உள்ளது. இப்போட்டியை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

19 வது உலக்கோப்பையில் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இந்த முறை யார் உலக கோப்பை யார் ஜெயிக்கப்போவது என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுபற்றி முன்னாள் கேப்டன் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், '' உலகக் கோப்பையை யார் வெல்வார்கள் என்பது தெரியாது. ஆனால், உலகக் கோப்பையை  இந்தியா வெல்ல வாய்புள்ளது'' என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்