கோலிக்குப் பந்துவீச முடியாமல் தவித்த சிராஜ்… வைரலாகும் எமோஷனல் வீடியோ!

vinoth

வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (07:06 IST)
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி மிக எளிதான வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைத் தட்டி சென்றார்.

ஐபிஎல் தொடரில் அவர் அறிமுகமானதில் இருந்து 7 ஆண்டுகள் பெங்களூர் அணிக்காக ஆடிய சிராஜ், முதல் முறையாக குஜராத் அணிக்காக தன்னுடைய தாய் அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். இதுபற்றி பேசிய அவர் “நான் போட்டித் தொடங்கும் முன்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருந்தேன். ஏனென்றால் நான் இங்கு 7 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். ஆனால் பந்தைக் கையில் எடுத்ததும் எல்லாம் காணாமல் போய்விட்டது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த போட்டியில் விராட் கோலிக்கு எதிராக பந்து வீசிய அவர் பந்துவீச முடியாமல் உணர்ச்சிப்பூர்வமாக தவித்தார். கோலிக்கு முதல் பந்து வீச வந்த அவர் பாதியிலேயே திரும்ப சென்றார். அதன் பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பந்துவீசினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

@mdsirajofficial @imVkohli
Izzat karna #Siraj se sikhana chahiye
Both may be are emotional but yeh video hamesha yaad rakhenge ❤️????#ViratKohli #viratvssiraj pic.twitter.com/61GCVbtXly

— ishfaqmalik ???????? (@therealishfaq) April 3, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்