வளர்த்துவிட்ட தயாரிப்பாளருக்கு வாய்ப்புக்கொடுக்கும் சிவகார்த்திகேயன்… ஆனால் இந்த கண்டிஷனோடுதானாம்!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (15:12 IST)
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இளம் தயாரிப்பாளராக வலம் வந்துகொண்டிருந்தவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனத்தின் உரிமையாளர் மதன்.

இயக்குனர் கௌதம் மேனனோடு இணைந்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க போய் பல பொருளாதார பிரச்சனைகளில் சிக்கி இப்போது படமே தயாரிக்க முடியாத நிலையில் இருக்கிறார் மதன். ஆனால் சிவகார்த்திகேயன் வளர்ந்துவரும் கதாநாயகனாக இருந்தபோது அவரை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மான் கராத்தே போன்ற படங்களை தயாரித்து கமர்ஷியல் ஹீரோவாக சிவகார்த்திகேயனை உருவாக்கியவர்.

இப்போது அவர் கஷ்டநிலையில் இருக்கும் நிலையில் அவரை அழைத்த சிவகார்த்திகேயன் ’கண்டிப்பாக நாம் ஒரு படம் பண்ணலாம். ஆனால் அதற்கு முன்னர் எல்லா பைனான்ஷியல் சிக்கல்களையும் தீர்த்துவிட்டு வாருங்கள்’ என்று கூறியுள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்