மூன்றாவது முறையாக அழைக்கும் சிவகார்த்திகேயன்… தயங்கும் கதாநாயகி!

செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:53 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாக உள்ள படத்துக்கு கதாநாயகி இன்னும் முடிவாகவில்லை.

புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் அந்த படத்தின் இயக்குனர் மீது கவனம் அதிகமாக விழுந்துள்ளது. இந்நிலையில் அவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் தமிழ்- தெலுங்கு மொழி படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் தொடங்க உள்ள இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்நிலையில் படத்தின் கதாநாயகி வேட்டை தீவிரமாக நடந்துவரும் நிலையில் பிரியங்கா அருள்மோகனை படக்குழு அனுகியுள்ளதாம். ஆனால் தான் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸானதும் சம்பளத்தை அதிகமாக்கி அடுத்த படங்களை ஒப்புக்கொள்ளலாம் என்ற முடிவில் இப்போதைக்கு எந்த முடிவும் சொல்லாமல் இருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்